ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் பாம்பியோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் 3வது நாட்டின் கருத்தை கேட்க அவசியமில்லை என்று தெரிவித்தார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை என்றும், வாங்கக் கூடாது என்று மற்ற நாடுகள் கூறினால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த பேச்சின் மூலம் அமெரிக்காவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version