மிக்-21 ரக போர் விமானம் விழுந்த விபத்தில் விமானி பலி

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே நேற்றிரவு இந்தியா விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்தானது. வழக்கமான பயிற்சி பணியில் ஈடுபட்டிருந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழுந்து வானில் தடுமாறிய போர் விமானம், கீழே விழுந்து விபத்தானது. கிழே விழுந்த வேகத்தில் போர் விமானம் நொருங்கி தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தினால் போர் விமானத்தை இயக்கிய விமானி அபினர் சவுத்ரி உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள விமானப்படை, விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version