தமிழகத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் UBER நிறுவனம் இலவச சவாரி வழங்க முன்வந்துள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உதவும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்துள்ள UBER நிறுவனம் இலவச சவாரி வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் இலவச சவாரி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றுவர பயண கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. பயணம் செய்ய விரும்பும் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச சேவையை பெற, தங்கள் செல்போனில் உள்ள UBER நிறுவனத்தின் APP-ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்ய கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோராயமாக 5 கி.மீ தூரம் வரை செல்வதற்கான கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.