டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 200 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், ரிசர் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுக்கு, டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், டெல்லி மாநகராட்சி ஊழியரான யாதவ் என்பவர் தனது வீட்டில் இருந்தபோது, வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 7ம் தேதி, 15 ஆயிரம் ரூபாய் போலி ஏ.டி.எம். மூலம் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மன்திர் மார்க் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வங்கிக் கணக்கில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.