இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக அதிபர் சிறிசேனா மீது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடுவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார்.ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அதை ஆதரிக்க போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நடக்கும் அதிகாரப்போட்டியில் யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம் என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச சமூகம் இதில் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.