அருணாசல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அருணாசல பிரதேச மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராக நபம் துக்கி செயல்பட்டு வந்தார். இவர் 2003 ஆம் ஆண்டு நுகர்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரியாக பதவி வகித்த போது எந்தவித நெறிமுறையும் பின்பற்றமால் 3 கோடி ருபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தத்தை தனது சகோதரர் நபம் தகமுக்கு வழங்கி ஊழல் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் நபம் துக்கி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.