திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் இருதயசாமி. இவரின் வயது தற்போது 81. இவர் இந்திய இராணுவத்தின் மீது பற்றுக்கொண்ட காரணமாக 18வது வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். 32 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், 1962ல் நடந்த இந்தியா சீனா போர் மற்றும் 1965ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போர் போன்றவற்றில் கலந்துகொண்டவர். தேசிய அளவிலான முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் 2014லிருந்து பங்கேற்று வருகிறார். 2020ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்.ஜெனரல் அருணுக்கு கேப்டன் இருதசாமி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனது வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதனை நன்கொடையாக இந்திய ராணுவத்திற்கு அளிப்பதாகவும், தானும் தன் மனைவியும் இறந்த பின்னர் தங்களது வீடு மற்றும் சொத்துக்களை இந்திய ராணுவத்துக்கே கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது விசயமாக நிரூபர்களிடம் பேசிய இருதயசாமி, இந்திய இராணுவம் எனக்கு பலவகைகளில் உதவி செய்துள்ளது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இந்த விசயத்தை நான் செய்துள்ளேன். இந்தச் சொத்தாந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கும், முதியோர்களின் நலனுக்கும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த முடிவை நானும் என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்தோம் என்றும் கூறியுள்ளார். மேலும் இளைய சமுதாயத்தினர் பலர் இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்றும் பேசினார்.