தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரல்.. இக்னோசியஸ் டெலோஸ் புளோரா!

”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற காலம் போய் படிப்படியாக பெண்கள் ஓவ்வொரு துறையிலும் வளர்ச்சி தங்களை முன்னேற்றிக் கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய ராணுவத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பெண் ஜெனரல் மேஜராக பதவியேற்று இருக்கிறார். அதனைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

இந்திய இராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னோசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவடம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி,  தாய் தெரசம்மாள். இவர் ஜனவரி 5, 1965-ல் பிறந்தவர். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் 2 சகோதரிகள். இவரது சகோதரர்களும் நாட்டிற்காக ராணுவ சேவை ஆற்றியவர்கள்தான். குறிப்பாக இவரின் மூத்த சகோதரர் அந்தோணிசாமி நாற்பது ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். இரண்டாவது சகோதரர் ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர். மூன்றாவது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். இப்படி குடும்பமே ஒரு ராணுவக் குடும்பம்தான்.

இக்னோசியஸ் டெலோஸ் புளோரோ பள்ளிப்படிப்பை முடித்தவுடன் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்று வந்த இந்திய ராணுவ செவிலியர் சேவை புரிய பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர், அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில்தான் செவிலியர்  பிரிவில் முதன்மை இடமாக அனைவரும் கருதக்கூடிய மேஜர் ஜெனரல் பதவியில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகஹ்ஜ்தில் இருந்து ஒரு பெண் மேஜர் ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Exit mobile version