விடியா திமுக ஆட்சியின் அவநிலைக் குறித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்கட்சித் தலைவரிடம் மனு!

தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பிறகு சாலை மார்க்கமாக சேலம் செல்வதற்கு திண்டுக்கல் வழியாக பயணத்தினை மேற்கொண்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி. அவர் செல்லும் வழியில் திண்டுக்கல்லில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
YouTube video player
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,  திண்டுக்கல் சீனிவாசன், மேலும் பல அதிமுகவினர் எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பினை நல்கினர்.  மேலும் அங்கு குழுமியிருந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் விடியா திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை எதிர்கட்சித் தலைவரிடம் கூறியும், மேற்கொண்டு மனுக்கள் அளித்தும் உள்ளார்கள். அனைத்து மனுக்களையும் எதிர்கட்சித் தலைவர் பெற்றுக்கொண்டார்

Exit mobile version