ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சாலையைக் கடக்கும் காட்டு யானைகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்தியூரிலிருந்து பர்கூர் மலை செல்லும் சாலையில் வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் பகல் நேரங்களிலேயே சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இவ்வாறு கடந்து செல்லும் யானைகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டுயானைக் கூட்டத்தை கண்டால் வாகனங்களை மேற்கொண்டு இயக்கமால் நிறுத்த வேண்டும் எனவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரப் பயணத்தை தவிர்க்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.