சொத்துக்காக அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி தனது தோட்டத்தில் காவலுக்காக படுத்திருந்த பரமனை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் விவசாயி பரமனை அவரது தம்பி முருகன் சொத்துக்காக கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முருகனை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட மாதேவன், சிவா, மாதையன், மாதேவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், கொலை சம்பவத்தை நேரில் பார்த்தப்விட்டு காவல்துறைக்கு சொல்லாமல் இருந்த பரமனின் கள்ளக்காதலியையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.