மண்டபத்தை அடுத்துள்ள மன்னார் வளைகுடா தீவுகளை மையப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அரசு மறுபரிசீலனை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இந்த பகுதிகளில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளன, இந்த நிலையில், வனத்துறை சார்பில் குருசடைதீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கிலி தீவு, பூமரிச்சான் தீவுகளை உள்ளடக்கி சுற்றுலா தலமாக செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்றும் எனவே, இந்தத் திட்டத்தினை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.