மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில் கப்பலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இந்த படகுகள் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இரண்டு முறை மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படும். சுருக்குமடி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் கப்பல்கள் கடற்கரையிலிருந்து புறப்படும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் அதற்குரிய இடத்திற்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் புதிதாக தாக்கல் செய்த மனுவில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி 12 மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடிப்பது சிரமம் எனவும், சுருக்குமடி வலை தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுமறு ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version