ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து கரையோரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணிநேரத்தில் ஃபானி புயல் உருவாகும் என்றும் இதனால் கடல்பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் மணியன்தீவு ஆகிய பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையோரத்தில் ஏராளமான பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.