மயிலாடுதுறை மாவட்டத்தில், வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிவடைந்து தற்போது சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக மாப்படுகை, நீடூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நெற்பயிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வேளாண் துறை அதிகாரிகள் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டு வடிகால் வசதி ஏற்படுத்தி தராததே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தூர்வாரும் பணியில் ஒப்பந்தகாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
வேதனையடைந்த விவசாயியின் கோரிக்கை பேட்டியை காண
⬇⬇⬇ ⬇⬇⬇
Discussion about this post