நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் தற்போது வளர்ந்து காய்க்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேதாரண்யம் தாலுகாவில், செம்போடை, கத்தரிப்புலம் , பெரியகுத்தகை, புஷ்பவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், மா மரங்கள் சேதமடைந்தன. தற்பொழுது ஒரு வருடம் கடந்த நிலையில், மரங்கள் துளிர்விட்டு காய்க்கத் தொடங்கி உள்ளது. இந்த மழைக்கால மாங்காய் நல்ல விலை போவதாகவும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு, அரசு சார்பில் முழு மானியத்தில் மாங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.