ஃபானி புயல் குறித்து, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் மட்ட குழுவுடன், பிரதமர் மோடி கலந்து ஆலோசித்தார்.
ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளது. இந்தநிலையில் நாளை மாநிலத்தில் உள்ள கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே, ஃபானி புயல் நாளை கரையைக் கடக்கிறது. இதனால், சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், வட ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், ஃபானி புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் மட்ட குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், பிரதமரின் தனிச் செயலாளர், பிரதமரின் கூடுதல் செயலாளர், உள்துறை செயலாளர், வானிலை துறை வல்லுநர்கள், தேசிய பேரிடர் பாதுகாப்பு படை நிர்வாக அதிகாரிகள் மற்றும் செயல் திட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.