அம்மா மினி க்ளினிக்கை மூடியதால் முளைத்திருக்கும் போலி டாக்டர்கள்.. என்ன செய்கிறது விடியா திமுக!

அம்மா மினி க்ளினிக்கை மூடியதன் விளைவே போலி டாக்டர்கள் அதிகரிக்க காரணம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சில தரவுகள் கிடைத்துள்ளன. திருவள்ளூரில் ஐம்பத்து மூன்று அம்மா மினி க்ளினிக் திறக்கப்பட்டு இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை இந்த ஐம்பத்தி மூன்று அம்மா மினி க்ளினிக்கையும் மூடியது. தற்போது திருவள்ளூரில் இருந்து மட்டுமே பத்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அம்மா மினி கிளினிக் மூடிய பகுதியில் இருந்தே சில போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு இங்கு சில பகுதிகளைக் குறிப்பிடலாம். ஊத்துக்கோட்டை, ஆர்.கே. பேட்டை, திருத்தணி, திருவாலாங்காடு போன்ற பகுதிகளில் அம்மா மினி க்ளினிக் மூடப்பட்டுள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த மற்றும் இதே பகுதிக்கு அருகிலுள்ள பகுதியில்தான் போலி மருத்துவர்கள் பிடிபட்டு உள்ளார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊரான திருவாரூரையும் ஒரு உதாரணத்திற்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். திருவாரூரில் உள்ள நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளிலுமே அம்மா க்ளினிக் மூடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கூறிய சில இடங்களில் இருந்தே போலி டாக்டர்கள் இவ்வளவு பேர் முளைத்திருக்கிறார்கள் என்றால், இன்னும் மூடப்பட்ட 2000 மினி க்ளினிக்குகள் பகுதியில் இருந்து எத்தனை போலி டாக்டர்கள் முளைத்திருப்பார்களோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அதிமுக ஆட்சியில் அம்மா மினி க்ளினிக் மூலமாக கட்டுப்படுத்தப்பட்ட போலி டாக்டர்கள் தற்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் அதிக அளவில் முளைத்திருக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் தக்க நடவடிக்கையின் சரியாக மெற்கொண்டிருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருதுகோள்.

(முற்றும்)

இக்கட்டுரையின் பகுதி 1  https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-dmkfails-part-1/

இக்கட்டுரையின் பகுதி 2  https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-dmk-fails-part-2/

Exit mobile version