தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களைப் பெருக்கும் திமுக அரசு..! இத்தனைப் போலி மருத்துவர்களா? (பகுதி 1)

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை மருத்துவத்திற்கு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வந்த காலம் என்று ஒன்று உண்டு. அது அதிமுகவின் பொற்கால ஆட்சியில்தான் நடந்தேறியிருந்தது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அதள பாதாளத்திற்கு சென்ற வண்ணம் இருக்கிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பலபேர் சிகிச்சை மேற்கொள்ள வருகின்றனர். இதனால் தமிழகம் ஒரு மருத்துவ சுற்றுலாத் தளமாக இருக்கிறது. இத்தகைய மருத்துவச் சுற்றுலாத்தளம் போலியாக மாற ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் போலி டாக்டர்கள் அதிகரித்து விட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.

திமுக ஆட்சியில் இத்தனைப் போலி மருத்துவர்களா?

திருச்சி மத்திய மண்டலத்தைச் சுற்றியுள்ள போலி டாக்டர்கள் இனங்காணப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திருச்சி மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 30 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை 4பேர், பெரம்பலூர் 3 பேர்,  அரியலூர் 4 பேர், தஞ்சாவூர் 5 பேர், திருவாரூர் 10 பேர், நாகப்பட்டினம் 3 பேர் என்று தொடர்ந்து பல மாவட்டங்களில் உள்ள போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, தன்னை டெல்டாக்காரன் என்று சொல்லும் தமிழக முதல்வரின் பூர்வீக மாவட்டமான திருவாரூரில் இருந்து மட்டும் பத்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தவிர கடலூரில் 4 பேர்கள், திருவள்ளூரில் 10 பேர்கள், தேனியில் 4 பேர்கள், சேலம் 4 பேர்கள் என்று தற்போதுவரையில் ஐம்பத்தி நான்கு நபர்கள் வரை கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

போலி மருத்துவர்கள் உருவாக யார்தான் காரணம்?

போலி மருத்துவத்தினை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று எந்தவித மருத்துவ படிப்பும் படிக்காமல் மருத்துவம் செய்வது. இன்னொன்று ஹோமியோபதி, அலோபதி, சித்தா போன்ற படிப்புகளைப் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்வது. இதனை ஆங்கிலத்தில் quackery என்று அழைப்பார்கள். போலி மருத்துவர்கள் பெருகியதற்கு முக்கியக் காரணம் அம்மா மினி க்ளினிக் மூடப்பட்டதுதான். ஏனென்றால் முன்னர் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள போலி டாக்டர்கள் நகரத்தில் மருத்துவம் பார்த்தவர்கள் அல்ல. கிராமத்தில் மருத்துவ சிகிச்சை பார்த்தவர்கள். பாமர மக்களை எளிதில் ஏமாற்றி தங்களை மருத்துவர்கள் என்று நம்ப வைத்துள்ளார்கள். பத்தாம் வகுப்புவரை கல்வி பயின்றுவிட்டு மருத்துவர் என்று பொய் சொல்லி மருந்து, மாத்திரைகள் தந்து ஊசியும் போடுகின்றனர். மேலும் போலி பட்டப்படிப்பு மூலம் க்ளினிக் தொடங்கி தங்களை மருத்துவர்கள் என்று அறிவித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு காரணம் அம்மா மினி க்ளினிக்கை மூடியதுதான். பாமர மக்கள் முதல் படித்த மக்கள் வரை அம்மா மினி க்ளினிக்கில் சிகிச்சைப் பார்த்து வந்தனர். இது மக்களுக்கு மிகவும் பயன் உள்ள திட்டமாக இருந்தது. இந்த திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அம்மா மினிக்ளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டது.

தொடரும்…

பகுதி இரண்டு கீழுள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-dmk-fails-part-2/

பகுதி மூன்று கீழுள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-amma-mini-clinic-closed-dmkfails-part-3/

Exit mobile version