உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தேர்தல் ஏற்பாடுகளுக்கு தேவைப்படும் கால அவகாசம் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை கடந்த டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும், 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த சட்டமுன்வடிவு உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாத நிலையில், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version