கோவையில் 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக உள்ளது உக்கடம் பகுதி. வெளி மாநிலங்களுக்கு செல்லவும்,மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முக்கிய நுழைவு வாயிலாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வண்டிகளில் லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்தநிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்தப்பணி நிறைவு பெற இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.