செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றி விவரங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் உறுப்பினர்கள் பற்றி விவரங்களை தற்போது பார்க்கலாம்.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு என தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை கொண்டு வருபவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அ. இ. அதிமுகவை பொறுத்தவரை செயற்குழு உறுப்பினர்களாக சுமார் 370 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2ஆயிரம் பேரும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர சிறப்பு அழைப்பாளர்கள் என்ற நிலையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பொதுக்குழுவில் கலந்துகொள்வார்கள்.

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

செயற்குழு உறுப்பினர்கள் விவரம்:

தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்…

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்…

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் என சுமார் 370 முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் இடம்பெறுவார்கள்

அதேபோல பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் விவரம்:

அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள்…

ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள், பிற மாநில நிர்வாகிகள்….

மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்…

புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்….

கட்சித்தலைமையால் நியமனம் செய்யப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 2000 பேரும் பொதுக்குழுவில் இடம்பெறுவர்.

அதே போல் சிறப்பு அழைப்பாளர்களாக

சிறப்பு அழைப்பாளர்கள் விவரம்:
மாநில சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள்….

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பிரிவு செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கழக செயலாளர்கள்..

சார்பு அமைப்புகளின் 17 பிரிவில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள்….

பிற மாநில சார்பு அமைப்புகளின் அணிசெயலாளர்கள், பிற மாநிலங்களின் மாவட்ட, தொகுதி, நகரக்கழகச் செயலாளர்கள்….

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்படும் கழக பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர்…

கட்சியின் தலைமைகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள்….

என சுமார் 2ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்கள் என்ற அந்தஸ்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வர்….

ஒட்டுமொத்தமாக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு நான்காயிரத்திற்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ள நிலையில்,
கூட்டம் நடைபெறும் வானகரம், விழாகோலம் பூணவுள்ளது.

 

Exit mobile version