ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தலைநகர் டெல்லியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய அவர்கள், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது தொடர்பாகக் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ விருப்பம் தெரிவித்த அனைத்து உறுப்பினர்களும் நாளை ஜம்மு காஷ்மீர் சென்று அம்மாநில ஆளுநருடன் அப்பகுதி மக்களைச் சந்திக்க உள்ளனர்.

Exit mobile version