விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 இடங்களில் அம்மா கிளினிக் உருவாக்கம் – சட்டத்துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை சார்பில் அம்மா கிளினிக் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், கோலியனூர், காணை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கிளினிக்கில் ஆய்வு நடத்திய அமைச்சர், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார். மேலும் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version