ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரரான திமுக பிரமுகரைக் கண்டித்து, காய்கறி வியாபாரிகள் சாலையில் காய்கறிகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையானது தற்போது வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 700-க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சியின் சார்பில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் டெண்டரை திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி என்.சிவக்குமாரின் நெருங்கிய ஆதரவாளரான திமுகவைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பவர் எடுத்துள்ளார். இவர் மாநகராட்சி அறிவித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட 731 கடைகளுக்கு பதில் 1,100 கடைகள் அமைத்து முறைகேடு செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக பிரமுகரின் அராஜகத்தை கண்டித்து, காய்கறி வியாபாரிகள் பேருந்து நிலையம் அருகே சாலையில் காய்கறிகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ,
காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை
கைவிட்டனர் .மேலும் மாநகராட்சியின் சார்பில் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை
வைக்கப்படும் என்றும் கொடுக்கும் பணத்திற்கு கட்டாயம் ரசீது வழங்கப்படும்
என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் இதனை அடுத்து வியாபாரிகள் கலைந்து
சென்றனர்…
வியாபாரிகளின் குற்றச்சாட்டு பேட்டிகளை காண
↕↕↕↕↕↕↕