பொய் சொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக – எதிர்க்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களை ஆதரித்து கழக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும், கைத்தறித் தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த விடியாத ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றால் இருக்கிறார்கள். ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஸ்டாலின் வேட்டு வைத்துள்ளார் என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினியினை தராமல் அந்த நல்லத் திட்டத்தினை செயல்படுத்தாமல் உள்ளார். எனது தலைமையிலான அம்மாவுடைய அரசில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு 564 மாணவர்கள் மருத்துவம் படிக்க உறுதுணையாக அமைந்தது.

கொரோனாத் தொற்றுக்காலத்தில் விலையில்லா அரிசி, சக்கரை, பாமாயில், பருப்பு என்று எல்லாமே இலவசமாக நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகித்தோம். பொங்கல் தொகுப்பினை சரியாக மக்களிடையே கொண்டு செலுத்தினோம். ஆனால் இதனை சரிவர செய்யாமல் இருக்கிறது திமுக அரசு. பெண்களுக்கு 1000 ரூபாய் தருவேன் என்று சொல்லி தரவில்லை. பொய்யைச் சொல்லி ஆட்சியில் ஏறியுள்ளார்கள். இதுவெல்லாம் மிகவும் அபத்தமான விசயம் என்று பேசினார் எதிர்கட்சித் தலைவர். மேலும் வாக்காளர்கள் மீது திமுகவிற்கு நம்பிக்கையில்லை. அடைத்து வைக்காமல் திறந்துவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று பயம் என்று பேசிய எதிர்கட்சித் தலைவர் இன்றைய பிரச்சாரத்தினை முடித்துக்கொண்டார்.

Exit mobile version