ஓட்டுப் போட்ட மக்களுக்கு வேட்டு வைத்த ஸ்டாலின் – எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கமாக இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் அக்ரஹாரப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார் எதிர்கட்சித் தலைவர்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும், கைத்தறித் தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த விடியாத ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றால் இருக்கிறார்கள். ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஸ்டாலின் வேட்டு வைத்துள்ளார் என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினியினை தராமல் அந்த நல்லத் திட்டத்தினை செயல்படுத்தாமல் உள்ளார். எனது தலைமையிலான அம்மாவுடைய அரசில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு 564 மாணவர்கள் மருத்துவம் படிக்க உறுதுணையாக அமைந்தது. இன்னும் ஸ்டாலின் தான் நிறைவேற்றுகிறேன் என்று கூறிய 520 வாக்குறுதிகளை இன்னும் செயல்படுத்தவில்லை என்று கூறிய எதிர்கட்சித் தலைவர் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து கே.எஸ்.தென்னரசு அவர்களை வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version