அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் டவிட்டர் பக்கத்தில் மீண்டும் ’இடைக்கால பொதுச் செயலாளர்’ என்ற பொறுப்பு இடம் பெற்றிருப்பதுடன் அவரது ட்விட்டர் பக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக இடைக்கால பொதுசெயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கும் விதமாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்த இடைக்கால பொதுசெயலாளர் என்ற பதவியின் பதிப்பை நீக்கம் செய்திருந்தார்.
இந்த நிலையில், இன்று ’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அஇஅதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு பதிவிடப்பட்டு ட்விட்டர் பக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.