கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைகளுக்கு பிற மாவட்டம் செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநூறு ரூபாயும், ஆதார் கார்டும் இருந்தால் அரைமணி நேரத்தில் இ-பாஸ் தயாராகி விடும் என கடலூரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-பாஸ் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அந்த ஆடியோ பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post