அரையிறுதிக்கு முன்னேற போவது யார்?: இங்கிலாந்து-நியூஸி. இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் சமபலம் வாய்ந்த இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. அதன் படி இன்று நடைபெறும் 41-வது லீக் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல், நியூஸிலாந்து அணியும் 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று 11 புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து இப்போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நியூஸிலாந்து வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இரு அணிகளும் அரையிறுதியை உறுதி செய்ய இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version