மேட்டூரில் வனத்துறை சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வனத்துறை சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

மேட்டூர் அடுத்த கருங்கல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படை , கொளத்தூர் காவல் நிலையம் , மேட்டூர் வனச்சரகம் சார்பில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கனகராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பிற்கான வழிமுறைகள், ராணுவத்தில் சேர்வது மற்றும் வங்கியில் தொழில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளித்தனர். இதில் கொளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version