தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70 புள்ளி 79 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 50 புள்ளி 05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 55 புள்ளி 31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.