கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி

அரசு தோட்டக்கலைத் துறையின் அறிவுறுத்தலின்படி குறைந்த தண்ணீரில், வெண்டை சாகுபடி செய்து வேதாரண்யம் பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான், செட்டிபுலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கஜா புயலால் பாதித்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த விவசாயிகளுக்கு, தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் மூலம், குறைந்த நாட்களிலேயே விளையக் கூடிய வெண்டை விதைகளை விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிமுகம் செய்தனர். பயிரிடப்பட்ட செடிகள் தற்சமயம் நல்ல விளைச்சலை தந்துள்ளதால், அவற்றை உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விற்று பயனடைகின்றனர். இலவசமாக விதைகளை வழங்கிய தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version