ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வீசிவரும் சூறைக்காற்றால் ஏராளமான பனை மரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை, ஏர்வாடி, தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள கரையோரங்களில் காற்றுத் தடுப்பான் எனப்படும் பனை மரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பனைமர தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தங்கள் மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவு எனப்படும் அலை தடுப்பு சுவர் அமைத்து தந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.