வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தானிஸ்என்பவர்,நீட்தேர்வுக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். சென்னை பெரியமேட்டில் தங்கியிருந்த அவர் , வேப்பேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த இரு டிப்டாப் இளம் பெண்கள் தானிசை அணுகி ஒரு கால் செய்ய வேண்டும் போன் கிடைக்குமா என கேட்டுள்ளனர். தானிசும் உடனே இரக்கப்பட்டு போனை கொடுத்துள்ளார். போனை வாங்கிய அடுத்த நொடி, இரு இளம் பெண்களும் சிட்டாக பறந்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தானிஸ் கூச்சல் போட்டுள்ளார்.
தானிஸ் போட்ட கூச்சலில் அக்கம் பக்கம் சென்றவர்கள் பைக்கில் சென்ற இளம் பெண்களை துரத்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஸ்டிரிங்கர்ஸ் சாலையில் பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.பெரிய மேடு போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்களுக்கு 17 வயதே ஆவது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போனை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
ஆண் திருடர்கள் தான் இப்படி போன் பேச கேட்பது போல கேட்டு செல்போன்களை பறித்து செல்வார்கள். இந்த முறை இரு சிறுமிகள் மாட்டியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.