பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்களை 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்தநிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிளாஸ்டிக்கில் ஒட்டும் தாள், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் ஸ்டிரா உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, அலுமினிய டம்ளர், மூங்கில் மரப்பட்டை தட்டு உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.