திமுக பெண் கவுன்சிலர், போலி ஆவணம் தயாரித்து 4 ஏக்கர் நிலம் அபகரிப்பு

கோவை செட்டிபாளையம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதை அபகரிக்க திட்டம் போட்ட திமுக பெண் கவுன்சிலர் சித்ராவின் கணவர் ரவிக்குமார் தனது நண்பர் லட்சுமணன் உதவியுடன் போலி ஆவணங்கள் தயார்செய்து அந்த இடத்தை அவரது பெயரில் பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடத்திற்கு சொந்தகாரரான மறைந்த கிருஷ்ணசாமியின் மகன் ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் முறைகேடு நடந்திருப்பதை செய்தனர். இதனையடுத்து தலைமறைவான திமுக கவுன்சிலரின் கணவர் ரவிகுமாரை தேடி வருகின்றனர்.

YouTube video player

Exit mobile version