சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட 7 பேர் உயிரிழப்பு

தேனி அருகே விபத்தில் பலியான திமுக நிர்வாகி வெற்றி அரசன் மற்றும் அவரது உறவினர்கள் 6 பேரின் உடலுக்கு தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் அஞ்சலி செலுத்தினார்.

தேனி அருகே நடந்த சாலை விபத்தில் வெற்றியரசன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடலுக்கு தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப், காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. மாற்றுக் கட்சியினர் என்றும் பாராமல் நள்ளிரவில் காத்திருந்து அஞ்சலி செலுத்திய ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுகவினருக்கு திமுகவினர் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version