"தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் திமுக"-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுக விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாதது குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான ஜனவரி 26ம் தேதி மாலை முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இதையடுத்து, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விளம்பரங்கள், சுவரொட்டிகள், கொடிகம்பங்கள் அகற்றப்பட்டன. ஆனால், ஆளுங்கட்சியான திமுக-வின் விளம்பரங்களோ, கொடிக் கம்பங்களோ அகற்றப்படவில்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னரும், அண்ணா நகர் மண்டலம் அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில், திமுகவின் விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாதது குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version