தொடரும் திமுக வாரிசு அரசியல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் கட்சித் தலைவர்களின்  பெரும்பாலான வாரிசுகளுக்கே இடம் கிடைத்துள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டு வருவதே ஜனநாயகத்தின் அடிநாதம். ஆனால், தி.மு.க.வோ, மீண்டும் நவீன மன்னராட்சியை கொண்டு வருவதில் பலே கில்லாடிகள் என்பதில் ஐயமில்லை.

தற்போதைய வேட்பாளர்கள் பட்டியலில் கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியோடு ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இறங்குகிறார். கருணாநிதி குடும்பத்தில் வாழையடி வாழையாக ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதே போன்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதியிலும், அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதியிலும், பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தூத்துக்குடியிலும் களம் காணுகின்றனர்.

ஆலடி அருணாவின் மகள் பூங்கோதைக்கு ஆலங்குளம் தொகுதியிலும், தங்கப் பாண்டியனின் மகன் தங்கம் தென்னரசுக்கு திருச்சுழி தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதியிலும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜாவின் மகன் பி.டி.ஆர்.பி.ராஜனுக்கு மதுரை மத்திய தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கு தி.நகர் தொகுதியும், கே.பி.பி.சாமியின் தம்பியான கே.பி.பி.சங்கருக்கு திருவெற்றியூர் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கே தலைச் சுற்றினால் எப்படி 2 ஜியில் தி.மு.க. அடித்த லட்சம் கோடிகளில் உள்ள சைபர்கள் போல் இந்த பட்டியல் இன்னும் நீள்கிறது.

சிவசுப்பிரமணியம் மகன் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு குன்னம் தொகுதியும், கா.சொ. கணேசன் மகன் கா.சொ.கண்ணணுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவேங்கடம் மகன் சரவணணுக்கு கலசப்பாக்கம் தொகுதியும், நாகநாதன் மகன் எழிலனுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியும்,சபாபதி மகன் சபா ராஜேந்திரனுக்கு நெய்வேலி தொகுதியும் ஒரே ஆளுக்கு குத்தகை தருவது போல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

பூண்டி கலைச்செல்வனின் தம்பி பூண்டி கலைவாணனுக்கு திருவாரூர் தொகுதியும், விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவுக்கு விருகம்பாக்கம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல். சுப்ரமணியனின் மகன் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்கு திருநெல்வேலி தொகுதியும், சேடப்பட்டி முத்தையாவின் தம்பி சேடப்பட்டி மணிமாறனுக்கு திருமங்கலம் தொகுதியும் தரப்பட்டுள்ளது.

திமுக மூத்த தலைவர் சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசனுக்கு காஞ்சிபுரம் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி கட்சித் தலைவர்களின் வாரிசுக்கும், உறவினர்களுக்கும் வாய்ப்பு வழங்கினால், சுட்டெரிக்கும் வெயிலில் கட்சி பணியாற்றிய தொண்டர்களுக்கு…

Exit mobile version