"நீட் தேர்வு குறித்து பொது இடத்தில் மக்கள் முன்பு விவாதிக்க தயார்"- எதிர்க்கட்சி தலைவர்

  நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் 9 மாத கால ஆட்சியில் அதிகார வர்க்கங்கள் தலைதூக்கி ஊழல் செய்து வருவதாக விமர்சித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறார் என்றும், பொய் சொல்லும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கலாம் என்றும் அவர் சாடினார்.

நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அதிமுக வேட்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தினார்.

Exit mobile version