நாங்குநேரியில் சட்டமன்றத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்றும், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி ஆகியோர் பல்வேறு ஊர்களில் பிரசாரம் மேற்கொண்டனர். காரியாண்டி என்னுமிடத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வசந்தகுமாரால் திணிக்கப்பட்டது எனவும், அதனால் அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக வழக்குத் தொடுத்ததால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டினார்.