விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு
அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பேசிய அவர், மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கவலைப்படாமல், தன்னுடைய குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிப்பதாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். அம்மா அரசு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் விடியா திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டினார். திமுக அரசை தூக்கி எறியும் வகையில், வரும் தேர்தல்களில் அனைத்து நிர்வாகிகளும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினார்.
Discussion about this post