தேர்தல் விதிமுறைகளை மீறி இலவச வேட்டி, சேலைகளை வழங்கிய திமுகவினர்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இலவச வேட்டி, சேலைகளை வழங்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பாலூரில் கடந்த 13 ஆம் தேதி செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, காஞ்சிபுர மாவட்ட உறுப்பினர் த.மோ அன்பரசன் ஆகியோர் இலவச, வேட்டி சேலை வழங்கியுள்ளனர். இதனை கண்டித்து அதிமுகவினர் புகார் தெரிவித்திருந்தனர். அதேபோல திமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதாக அப்பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி இப்ராஹிமும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு பாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version