இ.கம்யூ கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக வேட்பாளர்

சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற கூட்டத்தில் திமுக வேட்பாளர் பங்கேற்காதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பங்கேற்காதது கூட்டணி கட்சியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. மேலும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர்களும் கூட்டத்தை புறக்கணித்தது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே கூட்டணி ஒற்றுமை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

Exit mobile version