சாலையை ஆக்கிரமித்து திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தலைமையில் நடத்தப்பட்ட தெருமுனை கூட்டத்தை கடந்து செல்ல முயன்ற பொதுமக்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிலக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் சௌந்தரபாண்டியனை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தலைமையில் வத்தலகுண்டில் விராலிப்பட்டி -வத்தலகுண்டு சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து, தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்த ஊரை சேர்ந்த சிலர் அவசர வேலைக்காக கூட்டத்தை கடந்து செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களில் ஒருவரை நாஞ்சில் சம்பத் தலைமையிலான திமுகவினர், ஆவேசமாக தாக்க முயன்றனர். இதையடுத்து அருகில் காவல்பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர், இளைஞரை திமுகவினரிடமிருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version