தமிழ்நாட்டில் அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் திமுகவினரின் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில், அதிமுகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். திமுகவினர் தாக்குதலில், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் கார் உண்ணாடியும் உடைக்கப்பட்டது.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில், மதுபோதையில் இருந்த தி.மு.க.வினர், பெண்களை தகாத வார்தைகளால் திட்டி அத்துமீறலில் ஈடுபட்டனர். மேலும், தி.மு.க.வுக்கு வாக்களிக்கவேண்டும் எனக்கூறி பெண்களிடம் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குச்சாவடி முன்பு பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது குறித்து, நியாயம் கேட்ட அமைச்சர் பென்ஜமினிடம் தி.மு.க.வினர் அத்துமீறலில் ஈடுபட்ட நிகழ்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனிடையே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்பி ரவீந்திரநாத் கார் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. போடியில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. திமுகவினரின் அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்த ரவீந்திரநாத், இந்த தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என குற்றம்சாட்டினார்.
இதே போல், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணியகாரன்பாளையம் கணபதி நகர் பகுதியில் திமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையறிந்த அதிமுகவினர் அப்பகுதிக்கு சென்று திமுகவினரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்களது பெயர் ரவி மற்றும் வெள்ளிங்கிரி என்பதும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.