திமுக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி-அமைச்சர் பாண்டியராஜன்

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர ஸ்டாலின் பாடுபட்டு வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் மோகன் கார்டனில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வைத்திலிங்கத்தை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் திமுக அமைத்துள்ள கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி என்றும் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கூட்டணி எனவும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version