மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், தன்னுடைய வாக்கை செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் போபால், ராஜ்கர், குவாலியர் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகள் தேர்தலை சந்தித்தன. இந்நிலையில் போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் வாக்கு உள்ளது. ஆனால் திக்விஜய் சிங் வாக்களிக்க ராஜ்கருக்கு செல்லாமல் போபால் தொகுதியிலேயே தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே வாக்களிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.