அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த கொலை வழக்கில் மினியோபொலிஸ் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என ஹன்னேபென் கவுன்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜோ பைடன், தன்னால் மூச்சுவிடமுடியவில்லை என்பது தான் ஜார்ஜ் ஃபிளாய்டின் கடைசி வார்த்தைகள் என குறிப்பிட்டார். அவர்களை சாகவிடக்கூடாது என்றும், அவர்கள் கூறுவதை கேட்கவேண்டும் எனவும் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

 

இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

டெரெக் சாவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் 8 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version